நகோமியும் அவள் மருமகளான ருத்தும் தனது கணவனை இழந்தவர்கள். அவர்கள் இருவருமே எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். ஆனால், அவர்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்தார்கள். ஆகவேதான், கர்த்தர் அவர்களை அளவில்லாமல் ஆசீர்வதித்தார். அதுபோல, இன்று நீங்களும் கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்து அவரை நோக்கி கூப்பிடுங்கள்.