உங்களுடைய வழிகள் உங்களுக்கு மிகவும் சரியானதாக தோன்றலாம். ஆனால் இறுதியில் அது மரணத்திற்கு வழிவகுக்கும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்த அனுமதித்தால் அவர் உங்களை சரியான பாதையிலே நடத்துவார். நீங்கள் கர்த்தருக்கு பிரியமாயிருப்பீர்கள். நீங்கள் நினைப்பதற்கும், வேண்டிக்கொள்வதற்கும் மேலான ஆசீர்வாதத்தினால் அவர் உங்களை நிரப்புவார். ஏனென்றால் தேவன் உங்களைக்குறித்து நன்மைக்கேதுவானவைகளையே நினைக்கிறார்.