கர்த்தர் உங்களோடு உடன்படிக்கை செய்திருக்கிறார். நீங்கள் எங்கு சென்றாலும் அவர் உங்களுடனேகூட வருவார். துன்ப நேரத்தில் அவர் உங்களுக்கு உதவுவார். கண்ணீரின் பாதையிலிருந்து நம்மை தூக்கியெடுக்கவே இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறந்தார். அவர் நம் வாழ்விலுள்ள துன்பங்கள் யாவற்றையும் நீக்கி, நம்மை காப்பாற்றி நம்மோடு வாசம்பண்ணுவார்.