ஒவ்வொரு நாள் காலையிலும் நீங்கள் மகிழ்ச்சியுடன் கர்த்தருடைய சந்நிதிதிக்கு வரும்போது அவர் உங்களைச் சந்தித்து, அவருடைய இரகசியங்களை உங்களுக்கு வெளிப்படுத்துவார். கர்த்தர் உங்களை தனது சிநேகிதராக எண்ணுகிறார். நீங்கள் தேவனுடைய வார்த்தையை கேட்பதற்கும் அவரை நம்புவதற்கும் ஆர்வமாக இருந்தால், அவர் உங்களுடனே பேசுவார். நீங்கள் அறியாததும், உங்களுக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உங்களுக்கு செய்வார்.