தேவன் தம் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி விரும்புகிறார். அவர் ஒருபோதும் தம் பிள்ளைகளை சபிக்கமாட்டார். அவர்களுக்கு எந்தவொரு தீங்கும் வரவிடமாட்டார். ஒவ்வொரு நாளும் கர்த்தரை பற்றிக்கொண்டு, அவர்மீது நம்பிக்கையாயிருங்கள். அப்பொழுது, உலக ஆசீர்வாதங்களை மட்டுமல்ல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் அவர் உங்களுக்கு தருவார்.