கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் திட்டத்தை நிறைவேற்றி முடிப்பார். நீங்கள் முன்னோக்கிச் சென்று பெரிய காரியங்களைச் செய்ய அவர் உங்களுக்கு உதவுவார். நீங்கள் கையிட்டுச் செய்கிற எல்லாவற்றிலும் அவர் உங்களுக்கு வெற்றியை அருளுவார். பயப்பட வேண்டாம்! எருசலேமின் மதில்களைக் கட்ட நெகேமியாவின் கரங்களை பலப்படுத்திய தேவன் உங்கள் கரங்களையும் பலப்படுத்துவார். நீங்கள் தொடங்குகிற ஒவ்வொரு பணியையும் அவர் நிறைவேற்றுவார்.