Dr. பால் தினகரன் அவர்களின் மனைவியான இவர், ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு முன்பாக தேவனுடைய வல்லமைமிக்க உழியராக சேவை செய்து வருகிறார். அவர்களது பிரார்த்தனையின் மூலம் தேவனுடைய வல்லமையும், பிரசன்னமும் அளவில்லாமல் இறங்கும். தேவ கிருபையினால், அவர்களுடைய ஊழியத்தின் மூலம் அநேகர் அற்புதங்களையும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலையும், நோயிலிருந்து சுகத்தையும் பெற்று வருகின்றனர். அவர்களுடைய ஜெபத்தினால் அசுத்த ஆவியினால் கட்டப்பட்டிருக்கும் பலர் விடுதலை பெறுகின்றனர். உடைந்த குடும்பங்கள் மீண்டுமாக கட்டப்படுகிறது. இவர்களது தேவ செய்தியின் மூலம் வாலிப பிள்ளைகள் தொடப்பட்டு தங்கள் இருதயத்தை இயேசுவுக்கு திறந்து கொடுக்கின்றனர்.