இவர் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் வாலிபர் மத்தியில் ஊழியம் செய்யும்படி தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட அபிஷேகம் பெற்ற பாத்திரம். இவர் இந்தியாவில் தனது B.Tech படிப்பையும், டெக்சாஸ் பல்கழைக்கழகத்தில் MBA பட்டத்தையும் முடித்துள்ளார். தற்போது இவர் உலக புகழ்பெற்ற சர்வ தேச ஊழியமான இயேசு அழைக்கிறாரில் துணை பிரசிடென்ட்டாக ஊழியம் செய்கிறார். பிலிப்பியர் 2:15-ன்படி குற்றமற்றதும், மாசற்றதுமான வாழ்க்கையை இளைஞர்களுக்கு கற்பிப்பதை நோக்கமாகக் கொண்ட இவர் U- Turn ஊழியத்தின் தலைவருமாவார். ஆயிரக்கணக்கான வாலிப ஆத்துமாக்கள் தேவனுடைய மனதுருக்கத்தையும், சுகத்தையும், விடுதலையையும் பெற்றுக்கொள்ளும்படி இவரது கூட்டத்திற்கு வருகை தருகின்றனர்.