ஸ்டெல்லா ரமோலா

ஸ்டெல்லா ரமோலா

ஸ்டெல்லா ரமோலா ஒரு பாடகர் ஆவார். U-Turn நடத்தும் பல இசை நிகழ்ச்சிகளை அவரே தலைமையேற்று நடத்துகிறார். ஒவ்வொரு நிகழ்விலும் சுமார் 2000 பேர் கலந்து கொள்கின்றனர். இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்ட வேதாகம நிகழ்ச்சியான, “Do you know your Bible” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி பிராந்திய தொலைக்காட்சிகளிலும், Youtube-லும் வெளியானது. இசையின்மீது இவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தினால், ஸ்டெல்லா “Bachelor of Science in Music Business” துறையில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் தனது முதுகலை படிப்பை தொடர்ந்து வருகிறார். 2019 ஆம் ஆண்டில், இவர் "Stellazlife" என்ற Youtube சேனல் ஒன்றை உருவாக்கி, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதில் வெளியிடுகிற வீடியோவில் வேத சத்தியங்களை பற்றிய தனது எண்ணங்களையும், ஒருவர் அன்றாட வாழ்வில் நம்பிக்கையை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதையும், கிறிஸ்துவை பின்பற்றுவதைக் குறித்தும் வெளியிட்டுள்ளார்.