தேவன் உங்களை வழியிலே காப்பதற்கு ஒரு தூதனை அனுப்பியுள்ளார்; அவன் ஓர் இடத்தை உங்களுக்கு ஆயத்தம்பண்ணியுள்ளான். ஆகவே, சந்தோஷமாக தேவனுடைய சித்தத்தில் நடந்திடுங்கள். அவர் உங்களுக்கென்று ஒரு வேலையை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். உங்களுக்காக வாழ்க்கை துணையை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்; ஒரு வீட்டை ஆயத்தமாக்கியிருக்கிறார்; ஒரு குடும்பத்தை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி நடந்து அதை அடைந்திட வேண்டும். ஆகவே, சந்தோஷமாயிருங்கள். எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் அவரை ஸ்தோத்திரியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.